ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு தொடர்பாக சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது, அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து
ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சாலையில் உள்ள மாதா நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் அரிஸ்டோபால்(30) என்பவரை நகர் போலீசார் கைது செய்தனர். அரிஸ்டோபால் கர்நாடக மாநிலத்தில் சட்டப் படிப்பு படித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கஞ்சா வழக்கில் சட்டக் கல்லூரி மாணவர் கைது
