• Fri. Jan 17th, 2025

அல்ட்ரா வயலட் எலக்ட்ரிக் மோட்டார் பைக் ஷோரூம் கோவையில் துவக்கம்

BySeenu

Dec 12, 2024

அதிவேக எலக்ட்ரிக் பைக் நிறுவனமாக அல்ட்ரா வயலட் நிறுவனத்தின் புதிய கிளை மற்றும் பிரத்யேக விற்பனை அனுபவ மையம் கோவையில் துவங்கப்பட்டது.

அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வயலட்,
நாடு முழுவதும் எலக்ட்ரிக் பைக் விற்பனையில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் தனது இரண்டாவது விற்பனை மற்றும் அனுபவ மையத்தை கோவை அவினாசி சாலையில் துவங்கி உள்ளது.

நவ இந்தியா பகுதியில் துவங்கப்பட்ட புதிய மையத்தை அல்ட்ரா வயலெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நாராயண் சுப்ரமணியம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கும் விதமாக புதிய அனுபவ மையத்தை துவங்கி உள்ளதாகவும்,. இங்கு விற்பனை, சேவை மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த மையம் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு அதன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் அல்ட்ரா வயலைட் தனது அனுபவ மையங்களை திறந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

கோவையின் மையப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள இந்த மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அல்ட்ராவயலட்டின் முதன்மையான உயர் செயல்திறன் மோட்டார் சைக்கிளான எப்77 மேக் 2 குறித்து அறிந்து கொள்வதோடு அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இங்கு பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக அவர் கூறினார்.