• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் முதல் முறையாக டெக்னோ ஸ்போர்ட் ஸ்டோர் துவக்கம்

BySeenu

Aug 22, 2024

டெக்னோஸ்போர்ட் உயர்தரமிக்க தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் அதிநவீன ஆடைகளையும் விற்பனை செய்ய பெயர் பெற்ற நிறுவனமான டெக்னோஸ்போர்ட் கோவை ஆர்.எஸ்.புரத்தில் முதலாவது ஸ்டோர் துவக்க விழா நடைபெற்றது. சில்லறை விற்பனையில் பலப்படுத்தவும் நடப்பு நிதியாண்டில் விரிவாக்க நடவடிக்கையாக 15-16 ஸ்டோர்களை துவக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த ஸ்டோர் துவக்கப்படுகிறது.

இந்த ஆண்டில், தென்னிந்திய அளவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கான உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு புதிய ஸ்டோர்கள் பலவிதமாக துவக்கப்படுகின்றன பிரபலமான இடங்களில், அதிக மக்கள் நடமாடும் தெருக்கள், மால்கள், விளையாட்டு இடங்களில் கடைகளுள் கடைகளாக துவக்கப்படுகினறன. ஆன்லைன் வர்த்தகத்திற்கும், பொதுவான வணிக விற்பனைக்கும் உதவும் வகையில் டெக்னோஸ்போர்ட்ஸ் தங்களது ஸ்டோர்களை அதிகரிக்கிறது.

சர்வதேச அளவில் ஒரு பிரபலமான அனைவரும் அறியும் வகையிலான விளையாட்டு உடைகளில் முன்னணி நிறுவனமாக மாற உள்ளது. இதில் டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் சுனில் ஜூஞ்சன்வாலா,டெக்னோஸ்போர்ட் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் சுமித் சந்தாலியா,டெக்னோஸ்போர்ட் தலைமை செயல் அதிகாரி புஸ்பென் மெய்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.