

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்நிலையில் இன்று முதல் 4 நாட்கள் மாலை 6;30 முதல் 8 மணி வரை சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பி ரசிக்கக்கூடிய கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் லேசர் லைட் அமைக்க பட்டனர்.

மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் மாலை நேரங்களில் ஏரியை சுற்றி நடை பயிற்சி மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் இதர பொழுதுபோக்கு அம்சங்களை காண வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடைக்கானல் நகராட்சி இணைந்து கொடைக்கானல் ஏரியில் லேசர் லைட் சோ அமைக்கப்பட்டு உள்ளனர் .
இதனை காண மாலை நேரங்களில் ஏரிப்பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஒளிரும் மின் விளக்குகளை ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

