• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈரோட்டில் மாடுகளை தாக்கும் பெரிய அம்மை நோய்

தமிழகம் முழுவதும் தற்பொழுது கால் நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்கி வருகிறது.அதேபோல அரச்சலூர் அவல்பூந்துறை பகுதியிலும் கால் நடைகளுக்கு பெரியம்மை தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளோடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொட்டிபாளையம், சிலுவங்காட்டு வலசு , குட்ட பாளையம் , தேவனாம்பாளையம் , தண்ணீர் பாளையம் உட்பட கிராமங்களில் பெரியம்மை நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாமில் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமிற்கு வராத விவசாயிகளுக்கு அவர்கள் வீட்டுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இது பற்றி வெள்ளோடு கால்நடை மருத்துவர் D. ராஜா கூறும்போது…..இந்த பகுதியில் கிட்டத்தட்ட எண்பது சதவீத மாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முதல் கட்டமாக போடப்பட்டது. அரச்சலூர், அவல்பூந்துறை பகுதிகளில் சிறிதளவு பாதிப்பை கணக்கில் கொண்டு இந்த பகுதி முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் கிராம முழுவதும் உள்ள மாடுகளுக்கு தடுப்பூசி போட்டு நிறைவு செய்ய உள்ளோம் என்றார்.