• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு.. இருவர் உயிரிழப்பு..

Byகாயத்ரி

Aug 12, 2022

இந்தியாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், இமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று அப்பகுதியில் உள்ள காமேல் என்ற கிராமத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் ஒரு வீடு இடிந்து விபத்திற்குள்ளானது. இதில், இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.