• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு

சேலத்தில் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு மண் சரிவை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குப்பனூர் வழியாக செல்லும் வாகனங்கள் அடிவாரம் வழியாக ஏற்காடு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குப்பனூர் அடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களிலும் அதிக அளவில் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.