• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கருமாரி அம்மன் திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2025

மதுரை லட்சுமிபுரம் அடுத்த கான்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூரம் பெருவிழா கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

41ஆண்டுகளாக ஆடிப்பூர பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு 27 தேதி (ஞாயிற்றுக்கிழமை) லட்ச்சார்ச்சனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து விட்டால் பஜன் மண்டலி பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று (திங்கட்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜையுடன் ஹோமம் வளர்க்கப்பட்டு பால், பன்னீர், தயிர், இளநீர், விபூதி என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணைகள் கட்டப்பட்டது.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியிலும் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். தொடர்ந்து கோலாட்டமும் நடைபெற்றது.

இந்தக் கோவிலானது 41ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பாக தோன்றி அப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக அருள்பாலித்து வருவதாகவும், எவ்வித பிரச்சனைகள் வந்தாலும் மனதில் தேவி கருமாரி அம்மனை நினைத்தாலே பிரச்சினைகள் தீர்ந்து விடுவதாகவும்,

இவ்விற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவர் பெரிசேகரன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.