• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கூலித்தொழிலாளியின் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம்

Byவிஷா

May 30, 2024

சென்னையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ரூபாய் 32 லட்ச ரூபாய் கிரெடிட் ஆகியுள்ளதால், அவரது வங்கிக் கணக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி மதியழகன். இவர் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர் தன்னுடைய மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக பணம் எடுப்பதற்காக வங்கிக்குச் சென்று ரூ40,000 பணம் எடுக்க படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு காத்திருந்தார். ஆனால் அவருடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைக்கேட்ட மதியழகன் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த விசாரணையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று ரூ32 லட்சத்தை வேறொரு வங்கி கணக்குக்கு அனுப்புவதற்கு பதில் மதியழகன் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளது. இதனால் தற்காலிகமாக சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மதியழகன் வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்தார். மகளின் படிப்புக்காக பணம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில சைபர் கிரைம் போலீசார் மதியழகனின் வங்கி கணக்கை முடக்குமாறு தெரிவித்ததால் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாகவும் விசாரணை முடிந்ததும் மீண்டும் வங்கி கணக்கு செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.