• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கூலித் தொழிலாளி அடித்து கொலை..,

ByKalamegam Viswanathan

Jul 22, 2025

திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டு வீதியில் வீசி சென்ற கொடூரம் மது போதை தகராறா? அல்லது வேறு ஏதும் காரணமா? என உடலை கைப்பற்றி வில்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா 28 – கூலித்தொழிலாளியான சிவாவிற்கு திருமணம் ஆகி ஒன்றரை வயதிலும், ஒன்றரை மாதத்திலும் இரு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு சென்றவர் எதிர் நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் வில்லூர் செட்டியார் தெரு பகுதியில் இரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் ஒன்றுகடந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வில்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்து கிடந்த நபர் குறித்துவிசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் கூலித்தொழிலாளி சிவா என்பது தெரிய வந்தது தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் உள்ள செல்லப்பாண்டி என்பவருக்கு வீட்டில் சிவா உட்பட மூன்று பேர் இரவில் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.அதில் அவர்களுக்குள் நடந்த தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் மேலும் சிவாவை வீட்டுக்குள்ளேயே கொலை செய்து அவரது உடலை தரதரவன இழுத்து வந்து வீதியில் போட்டு சென்றதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இறந்த சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துமனைவி பவித்ரா அளித்த புகாரின் பேரில் சிவா மது போதை தகராறில் கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா?என்ற கோணத்தில் சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.