புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழபனையூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக ஸ்ரீ அழகு நாச்சியம்மன் ஆலயம் திகழ்கிறது

இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத நவராத்திரி கொலு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது

இதனை முன்னிட்டு 600 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்கு பூஜையில் மழை வர வேண்டிய விவசாயம் செழிக்கவும் தங்களது இல்லங்களில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் வேத மந்திரங்கள் முழங்க குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது
அதன் பிறகு 600 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு குங்குமம் என பல்வேறு விதமான சுமங்கலி பொருட்களை கீழப்பனையூர் கிராமத்தார்கள் சார்பில் வழங்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது



