மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைகை பெரியார் நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் மயில் மற்றும் காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படையைச் சேர்ந்த SSI அருண் தலைமையிலான காவல்துறையினர் நேற்று (அக். 16) பிற்பகல் 2.45 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.

இந்தச் சோதனையின்போது, சட்டவிரோதமாக வைத்திருந்த 6 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் குருசாமி (28), ஆனந்தகுமார் (32), ஆண்டிமுருகன் (29) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா, மூன்று செல்போன்கள், நான்கு ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




