• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

ByKalamegam Viswanathan

May 25, 2023

மதுரை யா.புதுப்பட்டி அங்காளஈஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை கடச்சனேந்தல் அருகே யா. புதுப்பட்டி மணி கார்டனில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஅங்காள ஈஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவில் கும்பாபிஷேக விழா 23ம் தேதி கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நவக்கிரக ஹோமம் அஸ்திர ஹோம பூஜையுடன் துவங்கியது. அதை தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயனம்| திருமுறை பாராயணம், வாஸ்து சாந்தி, அங்குரார்பனம், கலாகர்ஷனம் நடைபெற்றது. அதோடு 1ம் கால யாகசாலை பூஜை, மண்டல பூஜை, வேதிகா அர்ச்சனை நடைபெற்றது.அத்துடன் எந்திர ஸ்தாபனம், ஸ்தூபி வைத்தல், மருந்து சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது.


24ம் தேதி (இன்று) 2ம் கால‌ யாக பூஜை, எஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, புண்யா தனம், பூத சுத்தி, வேதிகா அர்ச்சனை, பூர்ணஹுதி, தீபாராதனை நடைபெற்றது.யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விநாயகர், அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அதை தொடர்ந்து விநாயகர் மற்றும் அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு, பால், பன்னீர், இளநீர், திரவியம் உள்ளிட்ட அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.தலைவர் வி.கே.எஸ் மாரிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருட்டும் அறுச்சுவை அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மணி கார்டன் வி.கே.எஸ்.மாரிச்சாமி, மற்றும் ராயல் கார்டன், பீகாக் கார்டன் பொதுமக்கள் செய்திருந்தனர்.