• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

ByM.JEEVANANTHAM

Apr 9, 2025

மயிலாடுதுறை அருகே நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாக குண்டம் அமைக்கப்பட்டு, அம்பாள் யாக குண்டத்தில் ஆவாகனம் செய்யப்பட்டு, நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை யாகசாலை பூர்ணாகுதி நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளங்கள் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசத்திற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு கட அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.