மாவட்டத்தில் பிரசித்து பெற்ற மருங்கூர் சுப்பிரமணிய சாமிக்கு கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று (அக்டோபர் 31)முன் இரவு நேரத்தில் மயிலாடி புத்தனார் கால்வாயில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் விஜய்வசந்த், எம்பி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

இதே நிகழ்வில் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், திமுக மாநில வர்த்தக பிரிவு இணைச்செயலாளர்
தாமரை பாரதி.
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெசீம். காங்கிரஸ் நிர்வாகிகள் சீனிவாசன், தங்கம் நடசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆராட்டு விழாவின் போது இதை ஒரு இலக்கிய விழாவாக மாற்ற 40_ஆண்டுகளுக்கு முன் திட்டம் இட்டு. மைலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவையை உருவாக்கிய. நிறுவனத்தலைவர்.ப.நா.பெருமாள் இப்போதைய விழா நாட்களில் நடை பெற்ற இலக்கிய,இசை, பட்டிமன்ற நிகழ்வில் அவரது புகழ் நினைவு கூறப்பட்டது.

இப்போதைய அமைப்பின் தலைவர் ஆ.நாகராஜன் பொதுச்செயலாளர் ப.விக்னேஸ்வரன் மற்றும் மகாலிங்கம் சாய்ராம் முன்னெடுத்து இலக்கிய விழா நடைபெற்றது.













; ?>)
; ?>)
; ?>)