• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட தூண்டில் பாலத்தை பார்வையிட்டார் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல்,நீரோடி வரை 47-மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல பகுதிகளில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள வாவத்துறை மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு 10_ ஆண்டுகள் கடந்து விட்டது.

வாவத்துறை புனித ஆரோக்கியநாதர் தேவாலையம் மற்றும் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பாறைக்கு அருகாமையில் உள்ள தூண்டில் பாலத்தில், கடல் அலைகள் எப்போதும் வேகமாக போதும் பகுதியில் உள்ள பாறைகள் அகன்று சிதறி உள்ள நிலையில், வாவத்துறை மீனவ மக்களின் அழைப்பை ஏற்று பாதிக்கப்பட்டுள்ள தூண்டில் பாலம் பகுதிகளை. கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது மக்களவை உறுப்பினருடன் வாவத்துறை தேவாலய பங்கு தந்தை லிகோரியஸ், அந்த பகுதியின் வார்ட் உறுப்பினர் திருமதி. ஆட்லின் முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ்,ஊர் தலைவர் வர்க்கீஸ், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

ஊரின் சார்பில் ஊர் தலைவர் வர்க்கீஸ், பங்கு தந்தை அருட்பணி லிகோரியஸ் இணைந்து மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தார்கள்.

வாவத்துறை பகுதியை பார்த்த பின், கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா தேவாலயம் ஊர் கமிட்டி தலைவருடனும் மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.