குமரி மாவட்ட தடகள வீராங்கனை தேசிய அளவில் சாதனை. விஜய் வசந்த் பாராட்டி சால்வை அணிவித்தார்.
கடந்த 08.04.2024 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசியப் பள்ளிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் நீளம் தாண்டும் போட்டியில் 5.73 மீட்டர் தூரம் தாண்டித் தங்கப்பதக்கம் பெற்று குமரி மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த குமரி மாவட்டத் தடகளச் சங்கத்தின் தலைசிறந்த வீராங்கனை K. தனுஷா அவர்களை சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் விஜய் வசந்த் அருகில் திமுக ஒன்றிய செயலாளர் பாபு, காங்கிரஸ் நிர்வாகிகள் காலபெருமாள், கொட்டாரம் ஹரிகிருஷ்ணன் மற்றும் பயிற்சியளித்த ஹரிகோபால கிருஷ்ணன், உட்பட குடும்பத்தினர் உள்ளனர்.