

இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலின் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திங்கள் சந்தை பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார்.
காங்கிரஸ் பேரியக்க கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்
விஜய்வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்JG. பிரின்ஸ் காங்கிரஸ் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் K.T.உதயம் ஆகியோர்கள் தேர்தல் ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

