சென்னை அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர் தேர்வு,தேர்தல் வாக்குறுதிகள் என பல பிசியான வேலைகளை முடித்துவிட்டு பிரச்சாரத்திற்கு தயாராகி சென்னை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைப்புச் செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பிரச்சாரப்பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக் கூறி வழி அனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.