விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார் . அப்போது பேசிய அவர்,
திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பவும்,எடப்பாடி பழனிச்சாமியை கோட்டைக்கு அனுப்பவும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அர்பணிப்பு உணர்வோடு பணியாற்றுங்கள் . உங்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் நாங்கள் செய்து கொடுப்போம்.
அதிமுக ஆட்சியில் அதிமுக வினர் தலை நிமிர்ந்து நடந்து வந்தார்கள். தமிழகமும் தலைநிமிர்ந்து இருந்தது.
திமுக ஆட்சியில் எங்கே சென்றாலும் லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டு விட்டது.கமிஷன் பகிரங்கமாக ஏலம் விடுகிறார்கள். இதை எல்லாம் தடுக்க வேண்டும் என்று சொன்னால் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு வியர்வை சிந்து நீங்கள் பணியாற்றுங்கள் ரத்தம் சிந்தி உங்களது கஷ்டங்களை போக்கி உங்களை வாழ வைப்பேன்.
அதிமுக ஆட்சியில் தான் அமைச்சராக இருக்கும்பொழுது வாரம் வாரம் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி நலத்திட்ட உதவிகளை செய்து வந்தோம்..
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை இந்த ஆட்சியில் நிறுத்திவிட்டார்கள்.
திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் ஏழைகளுக்காக ஆட்சி நடத்த அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு பேசினார்.
ஆணையூர் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி நாராயணன் பேசியது
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து அமைச்சராக இருந்து அரசு கலைக் கல்லூரிகள் விருதுநகர் மருத்துவக் கல்லூரி கிராமங்கள் தோறும் பேவர் பிளாக் சாலைகள், சிவகாசி மாநகராட்சி முழுவதும் தாமிரபரணி கூட்டு குடிநீர் நீர் வசதி செய்து குடிநீர் பற்றாக்குறை இல்லாத தொகுதியாக மாற்றி உள்ளார்.

தினந்தோறும் மக்களை சந்திக்க கூடிய வகையில் செயலாற்றி வந்தார் தற்போது சிவகாசி தொகுதியில் காங்கிரஸ் எம் எல் ஏ வாக ஆக இருப்பவரை மக்கள் சந்தித்தது கிடையாது.
அவரை சாட்சியாபுரம் புதிய ரயில்வே மேம்பாலத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை தான் கடந்த நான்காண்டுகளாக இருந்து வருகிறது.
இந்த நிலை மாற சிவகாசி தொகுதி மக்கள் தயாராகி விட்டனர் என பேசினார்.
கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)