விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசியில் 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
சிவகாசி, திருத்தங்கல் அருள்மிகு மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசியில் 5 இடங்களில் நேற்று காலை நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நீர்,மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தண்ணீர் பழம் மற்றும் இயற்கை பானங்களை வழங்கினார். திருத்தங்கல் மண்டலம் அலுவலகம் எதிர்புறம், மேலரதவீதி தேவர் சிலை அருகில், சிவகாசி சிவன் கோவில் அருகில், சிவகாசி அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைபள்ளி அருகில், சிவகாசி அம்பேத்கர் சிலை அருகில் என மொத்தம் 5 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்சியில் சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.என். பாபுராஜ், சிவகாசி நகர செயலாளர் அசன்பதூருதீன், சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் தெய்வம், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பிலிப்வாசு, சிவகாசி மாமன்ற உறுப்பினர் கரைமுருகன், சிவகாசி முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கோவில்பிள்ளை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம், ஒன்றிய கவுன்சிலர் சுடர்வள்ளிசசிகுமார், சிவகாசி முன்னாள் நகர் மன்ற கவுன்சிலர்கள் திருமுருகன், காமாட்சி, தலைமை கழக பேச்சாளர் சின்னத்தம்பி மற்றும் வார்டு செயலாளர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை 3வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம், 47 வது வட்ட கழக செயலாளர் சாம் (எ) ராஜா அபினேஷ்வரன் செய்திருந்தனர்.