ராஜபாளையம் நகர அதிமுக வடக்கு கழகம் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஜவகர் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர வடக்கு கழகச் செயலாளர் வக்கீல் துறை முருகேசன் தலைமை தாங்கினார். கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கழக அமைப்புச் செயலாளர் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை எடுத்து கூறி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் விருதுநகர் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் என் எம் கிருஷ்ணராஜ், நகர தெற்கு கழகச் செயலாளர் எஸ்.ஆர். பரமசிவம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக இணைச் செயலாளர் அழகுராணி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஆர். எம். குருசாமி, அழகாபுரியான் நவரத்தினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜசேகர், சந்திரா மற்றும் கழக நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





