அதிமுக 2026-ல் மீண்டும் ஆச்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி சொர்ண பைரவருக்கு பால் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் செய்த நிகழ்வு திடீரென பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஈரோடு அவல்பூந்துறை, இராட்டை சுற்றிபாளையத்திலுள்ள உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற பைரவர் திருத்தலமான அருள்மிகு ஸ்ரீதென்னக காசி பைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி காலத்தில் இரண்டாம் கால பூஜையில் பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகளை அதிமுக 2026-ல் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கழக அமைப்பு செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர் கைகளால் சிறப்பு பூஜைகளை செய்தார். இந்நிகழ்வின் போது விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.






















