• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீஉஜ்ஜைனி காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

ByG.Ranjan

May 26, 2024

காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ. உஜ்ஜைனி காளியம்மன் கோவில் மகா கும்பா பிஷேகம் 87 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

காரியாபட்டி அருகே காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிருஷ்ணாபுரம் ஸ்ரீ. உஜ்ஜைனி காளியம்மன் கோவில் 87 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபி ஷேக ஏற்பாடுகள் செய்யப் பட்டது. கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு 24ந்தேதி காலையில் கணபதி ஹோமத்துடன முதல் கால பூஜைகள் துவங்கப் பட்டது. புன்யா வாசகம், வாஸ்து சாந்தி ரக்ஷா பந்தனம், வேத பாராயணம், நடை பெற்றது. 25ந் தேதி இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, கன்னி பூஜை நடை பெற்றது. 26ந்தேதி நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப் பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர் வலமாக கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியாரிகளால கோபுர கலசத்துக்கு மகா அபிஷேகம் செய்யப் பட்டது. அதன் பிறகு மூலவராக அமர்ந்திருக்கும் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை கள் நடை பெற்றது. விழாவில் அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப் பட்டது. விழா ஏற்பாடு களை கிருஷ்ணா புரம் கிராம பொது மக்கள் செய்திருந் தனர். சுமார் 87 ஆண்டு களுக்கு கும்பாபிஷே கம் நடை பெற்றதால் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.