10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் மனீஸ்குமார் 498 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

இவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்
இவரது தந்தை சந்திரசேகர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தாய் ராணி கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.