• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ; இரட்டை குழந்தைகளுக்கு எடைக்கு எடை நாணயம்!

By

Aug 30, 2021 , ,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நந்த கோபாலசாமி திருக்கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கிருஷ்ண பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மா ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தல் நிகழ்சி தொடங்கியது .இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ஆனந்த வயப்பட்டு கோஷமிட்டு மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள கோவிலில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுக்கு ராதா, ருக்மணி, பாமா ,கிருஷ்ணர் வேடமணிந்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்..இதனையடுத்து முக்கிய நிகழ்வாக துலாபார நிகழ்ச்சி நடைபெற்றது, பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த ஆண்டு கிருஷ்ண பரமாத்மாவை வணங்கிச் சென்ற தம்பதிகளுக்கு இரட்டை குழந்தை பிறந்த காரணத்தால்,

அவர்கள் தங்கள் இரட்டை குழந்தைகளான ராமலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய குழந்தைகளை ஒரு தட்டிலும், அதற்கு சமமாக நாணயங்களை மற்றொரு தட்டிலும் வைத்து காணிக்கை செலுத்தினர்.மேலும் , இக்கோவிலில் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும் , திருமணம் கைகூடவும் வேண்டிகொண்டனர்.