

இந்த வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி தரப்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி வழக்கில்
குற்றச்சாட்டப்பட்ட முதல் நபரான கேரளாவை சேர்ந்த சயானுக்கு சம்மன்
அனுப்பப்பட்டது. இன்றைய தினம் கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த மாதம் 11 ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்திருந்த நிலையில்,
கேரள மாநிலம் பாலக்காடில் மற்றொரு வழக்கில் ஆஜராக உள்ளதால், அன்றைய தினம் சிபிசிஐடி விசாரணைக்கு சயான் ஆஜராகவில்லை
தொடர்ந்து, 2 ஆம் முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று விசாரணைக்கு
ஆஜராகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது. முதல் முறையாக சயாணை சிபிசிஐடி விசாரணை செய்கின்றனர்.
2021 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்க காரணமானவர் இந்த சயான்
என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி.தலைமையிலான
தனிப்படையினர் விசாரணையில் சயான் இருமுறை விசாரணை செய்யப்பட்டார்.

