• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆஜர்

BySeenu

Mar 11, 2025

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளுக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜராகி உள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது. இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கடந்த ஜன 19 ஆம் தேதி சசிகலா கோடநாடு எஸ்டேட் வந்த போது, பங்களாவில் உள்ள அறைகளை பார்த்து விட்டு ஏதாவது கேட்டாரா ? என போலீசார் கேள்வி எழுப்பினார். ஆனால் சசிகலா ஏதும் கேட்கவில்லை என நடராஜன் கூறி இருந்தார்..மேலும் கணினி ஆப்பரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை குறித்தும் நடராஜானிடன் கேள்வி எழுப்பட்டு உள்ளது. அன்று மாலை விசாரணை நிறைவடைந்தது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியி இருந்தனர்.மேலும் இன்று மார்ச் 11 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதே போல அப்போதைய பாதுகாப்பு பிரிவு ஆய்வாளராக இருந்த கனகராஜ் இறுதியாக விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுக்கு குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அவர் தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.