தொற்றுநோயை உருவாக்க காத்திருக்கும் நகராட்சியால் கட்டப்பட்ட கழிவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. மலைகளில் இளவரசி என்று அழைக்கப்படுவது கொடைக்கானல். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சிகள் சுற்றுப்புற பகுதிகள் குப்பை கூலமாக கழிவுகள் தூக்கி போடப்படுகிறது.

அங்குள்ள கழிப்பறை தொற்றுநோய் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நீர்வீழ்ச்சி அருகே புற்றுநோயை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் கண்ணை திறந்து பார்த்து சுற்றுலா பயணிகள் வரும் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் பகுதிகளில் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.








