கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஒரு பேருந்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பியுள்ளனர் . அப்போது வத்தலகுண்டு பிரதான சாலையான டம்டம் பாறை அருகே பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது .
உடனே அருகில் இருந்தவர்கள் பேருந்தில் இருந்த அவர்களை பத்திரமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்டனர் . விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் . இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.