கொடைக்கானலில் உள்ள அஞ்சு வீடு அருவி மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலை சுற்றியுள்ள சுற்றுலா துறையால் அங்கீகரிக்கபடாத அருவிகள் எல்லாமே தடை செய்யபட்ட பகுதிகளாக அறிவிக்கபடுகிறது.

இந்தப் பகுதியில் இதுவரை 47 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் மற்றும் அவர்களை அழைத்து செல்பவர்கள் எல்லாருக்கும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லாத பகுதியாக இருப்பதால் தொடர்ந்து இறப்புகள் ஏற்படுகிறது.

இவற்றை சரி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டோம் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பாவி சுற்றுலா பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் இவ்வாறு அறிவித்துள்ளது பொது மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.




