மன்னர் திருமலை நாயக்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கம் நிறுவனத் தலைவர் சபாஷ் நாயுடு மாநில இளைஞரணி தலைவர் ஜனார்த்தனன் மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளங்கோவன், மாவட்டத் தலைவர் சிங்கார கோட்டை அருண்,
மாவட்டச் செயலாளர் பூச்சி நாயக்கன்பட்டி பாலா மாவட்ட துணைச் செயலாளர்
செல்லம்மானந்தாடி பாலாஜி மாநில கௌரவ ஆலோசகர் வினோத் குமார்
மாவட்ட கவுரவ ஆலோசகர் ஆனந்த், வீரையன், மகாராஜ் குமார், விஜயகுமார், உட்பட பட பலர் பங்கேற்றனர். திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ பி செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேயர் இளமதி ,துணை மேயர் ராஜப்பா ஆகியோர் திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திண்டுக்கல் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் தனபால், மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன்,மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் செல்வராகவன், விடுதலை சிறுத்தை சார்பில் சீனிவாச பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.










