• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

யஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேஜிஎஃப்- 2’ போஸ்டர் வெளியீடு !

நடிகர் யஷ் பிறந்தநாளையொட்டி ‘கேஜிஎஃப் – 2’ படத்தின் புதிய மிரட்டலான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘கேஜிஎஃப் 2’ படத்தின் வெளியீட்டையொட்டி தேசிய விடுமுறை அளிக்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதிய வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் யஷ் இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎஃப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2022 ல் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த நிலையில், இன்று யஷ்ஷின் 36 வது பிறந்தநாளையொட்டி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்க்கிறார் யஷ். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்களும் நடிகர் யஷ்-க்கு சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.