மதுரை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் கருமலை (வயது 26) இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் பல்வேறு வழக்குகள் உள்ளது.
. கருமலை மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பெருங்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரை போக்குவரத்து நகர் பகுதியில் வைத்து வெட்டி படுகொலை செய்தனர்.

இதற்கு முனீஸ்வரனின் அண்ணன் தங்கேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் பழி தீர்ப்பதற்காக திட்டமிட்டு கொண்டிருந்தனர். இந்த நிலையில் வேறொரு வழக்கில் கருமலை சிறைக்கு சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
முனீஸ்வரனின் கொலை வழக்கை தொடர்ந்து கருமலை பெருங்குடி பகுதியில் சொந்த வீட்டை விட்டு விட்டு கீரைத்துறை திரவிய லிங்கேஸ்வரர் தெரு பகுதியில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்து வந்த கருமலை பெருங்குடி பகுதியில் உள்ள நண்பர் பாலாவை சந்திக்க வந்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட தங்கேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 27ஆம் தேதி பெருங்குடி அம்பேத்கர் நகர் பகுதியில் கருமலையை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர் . உடன் வந்த பாலாவையும் தாக்கிய நிலையில் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இது குறித்து பெருங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தலைமறைவாக பதுங்கி இருந்த முகமது அல் தாப் (வயது 19 ) சாய்ராம் (வயது 17) பெருங்குடி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற கோழி சிவா (வயது 28) முத்துமணி (வயது 35), பாலமுருகன் (எ) சர்கரை பாலமுருகன் (வயது 28) மற்றும் பெருங்குடி பகுதியை சேர்ந்த தங்கமுத்து (வயது 17) ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்
இதில் முக்கிய குற்றவாளியான தங்கேஸ்வரன் (வயது 36) தலைமறைவாக இருந்த நிலையில் போலீஸார் வலையங்குளம் பகுதியில் வாகன சோதனையின் போது காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அங்கிருந்து தங்கேஸ்வரன் தப்பி ஓட முயன்றான். அப்போது சினிமா படபாணியில் போலீஸார் அவரை விரட்டி பிடித்து கருமலை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தங்கேஸ்வரனை கைது செய்தனர்.
இதில் சாய்ராம் மற்றும் தங்க முத்து இவரும் 17வயது நிரம்பிய சிறார்கள் இருவர் என்பது குறிப்பிடத்தக்கது.