• Fri. Apr 26th, 2024

கெஜ்ரிவால் சந்தர்ப்பவாத அரசியல்
செய்வதாக பா.ஜ.க குற்றச்சாட்டு

அரவிந்த் கெஜ்ரிவால் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தேசியவாதம் என்ற போர்வையில் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், தேசியவாதத்தை பற்றி அதிகம் பேசும்
கெஜ்ரிவால், ஐ.நா. சபை கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கூறிய அநாகரீகமாக கருத்து குறித்து மௌனம் காப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்ததை சாதனையாக கெஜ்ரிவால் தெரிவிக்கிறார். ஆனால் உண்மையில், சுதந்திரத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளில் உருவான நாளில் தேசிய கட்சியாக மாறிய ஒரே கட்சி பாஜக மட்டுமே. பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளில் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்றன. ஆனால், ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாற 10 ஆண்டுகள் ஆனது. இவ்வாறு அவர் தெரிவித்தார். டெல்லியில் ஆம்ஆத்மி தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால், எல்லையில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு எல்லாம் சரியாக உள்ளது என்று கூறுகிறது. நாட்டின் வீரர்களுக்கு சிறிது தைரியத்தையும் மரியாதையையும் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *