புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் செயல்பட்டு வருகிறது இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு 24 மணி நேரத்திற்கு 8 ரூபாய் மட்டுமே வசூல் செய்ய வேண்டும்.

ஆனால் ஏலம் எடுத்தவர் தற்பொழுது 15 ரூபாய் வசூல் செய்து வருவதாகவும் இது சட்டவிரோத செயலை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்று இந்தத் தொகையை ஒப்பந்ததாரர் எடுத்து வருவதாகவும் இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தகவல் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கிய தமிழக தேசம் கட்சியின் புதுக்கோட்டை மாநகர மாவட்ட செயலாளர் காசிநாதன் செய்தியாளர்களை சந்தித்து தொடர்ந்து அடாவடியில் ஈடுபடும் மாநகராட்சியை தங்களுடைய கட்சியின் சார்பாக கடுமையாக கண்டிப்பதாகவும் குறிப்பாக மாநகராட்சி ஆணையர் நாராயண ணை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொகை விட அதிக தொகை வாங்கும் வீடியோவையும் வெளியிட்டார் காசிநாதன்.