• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் கருப்பையா எம்.எல்.ஏ.,பார்வையிட்டு ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனை பஸ் நிலையம் பின் புறம் உள்ளது. இந்த மருத்துவ மனை க்கு நேற்று காலை12.50 மணிக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ.கருப்பையா வருகை தந்தார் அவரைத் தலைமை மருத்துவ அதிகாரி தன சேகரன் வரவேற்றார்.

அதன் பின் மருத்துவ மனையில் பல பகுதிகளை பார் வையிட்டு விட்டு பிரசவ வார்டு பகுதிக்கு சென்றார். அங்கு நேற்று குட்லாடம்பட்டியைச் சேர்ந்த சேவுக பெருமாள் மனைவி மாணிக் கவல்லி என்பவருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு பணம் பரிசளித்தார். பின் அவரிட ம் மருத்துவ மனையில் சிகிச்சையளிப்பதில் குறைகள் எதுவும் உள்ளதா என்றும் கேட்டறிந்தார். பின் செவிலியர்கள் ஓய்வு அறை, பிண அறுவை சிகிச்சை கூராய்வு மையத்தில் குளிர்சாதன வசதி, மருத்துவமனையில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய தனி மின்மாற்றி அமைத்தல் வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை தலைமை மருத்துவர் தனசேகரன்
கூறினார்.

அதற்கு உடனே எம்.எல்.ஏ.கருப்பையா,வாடிப்பட்டி மின் உதவி பொறியாளர் பரமேஸ்வரி யை அலைபேசியில் தொடர்பு கொண்டு அரசுமருத்துவமனைக்கு என்று தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அதற்கு தாங்கள் மருத்துவ மனையை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து உதவி மின் பொறியாளர் பரமேஸ்வரி மருத்துவமனைக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். உடன் டாக்டர்கள் நிர்மலன், ராமகிருஷ்ணன், சித்த மருத்துவர் கவிதா, தலைமை செவிலியர் வனஜா,செவிலியர் கவிதா உள்பட செவிலியர்கள் மற்றும் மருத்துவ மனை பணியாளர்கள் இருந்தனர்.