• Wed. May 20th, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம் பேட்டி ..,

ByP.Thangapandi

May 19, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியான சந்தை பகுதி அமைந்துள்ளது.,
இப்பகுதியில் காய்கறி சந்தை, பூ மார்க்கெட், நூலகம், வேளாண்மை அலுவலகம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கின்றன.,

இந்நிலையில் காய்கறி கழிவுகள், குப்பைகள், கொட்டப்பட்டு மழைநீர் தேங்கியும் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள சூழலில் உசிலம்பட்டி தவெக எம் எல்ஏ விஜய் மகாலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.,

இதில் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து துப்புரவு பணியாளர்களை வைத்து குப்பைகளை அகற்றினர் அப்பொழுது துர்நாற்றம் வீசியதை அறிந்து அனைவருக்கும் முக கவசம் வழங்கி பணிகளை மேற்கொள்ள செய்தார்., தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் குப்பைகளை அகற்றினர்.,

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உசிலம்பட்டி தவெக எம்எல்ஏ விஜய் மகாலிங்கம்.,

கடந்த கால ஆட்சியில் சுகாதாரம் இல்லாமல் இருந்தது முதல் முறையாக என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தார்கள் மக்களுக்காக முதலமைச்சர் அவர்கள் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சுகாதாரமாக இருக்க வேண்டும் எங்களை அனுப்பியதால் முதல் செயலாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளேன்.,

உசிலம்பட்டி பகுதியில் எங்கும் குப்பைகள் இருக்காது முதல்வர் அவர்கள் பொற்கால ஆட்சி தருவார் அதற்கான சாட்சி தான் அசுத்தங்களை சுத்தம் செய்து வருகிறோம் தொடர்ந்து பணி செய்வோம்.,

எனக்கு வந்த மனுக்களை முக்கிய தேவையாக இந்த சந்தை பகுதியில் உள்ள குப்பைகளால் ஆட்சிக்கு அவல் நிலையாக இருந்து தவெக ஆட்சியில் முதலில் செய்தது சுத்தம் தான் எனவும் உசிலம்பட்டி சுத்தமாக இருக்கும் முதல்வர் வழியில் பொற்கால ஆட்சி இங்கு கண்டிப்பா நடக்கும் என்றார்.,

சென்ற எம்எல்ஏ இதனை பார்த்திருக்க வேண்டும் சட்டமன்ற அலுவலகத்தை கட்டுகிறார்கள் ஒப்பந்த பணியை முடிக்கிறார்கள் பணத்திற்காக செயல்படுகிறார்கள் தவிர அலுவலகத்தில் உட்காரவில்லை ஒரு எம்எல்ஏ அமர்கின்ற பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்பது கூட தெரியவில்லை நாங்கள் வந்தவுடன் நாளை எம்எல்ஏ அலுவலகம் திறந்து விடுவோம் மக்கள் முதலில் எங்க கிட்ட வர வேண்டும் முதலில் நான் இந்த பகுதியில் தான் இருப்பேன் ஆனால் சுத்தமாக இருக்கும் முன்பு ஆட்சியில் இருந்ததை போன்று இருக்காது எனவும்.,

பல பல ஆண்டுகளாக 58 கால்வாயை வைத்து அரசியல் செய்து வந்தார்கள் 58 கால்வாயில் நிரந்தர அரசாணை வேண்டும் என்று தான் எனது முதல் கோரிக்கையாக சட்டமன்றத்தில் பேச்சு இருக்கும் எனவும் இதனை முதல்வர் நிறைவேற்றுவார் எனவும்

சென்ற ஆட்சி வீடியோ மாடல் ஆட்சி பேருந்து நிலையம், கண்மாய் கரை வீடியோ போட்டார்கள் செயல்படுத்தவில்லை அதனால்தான் நல்ல தலைவர் நல்ல மனிதன் முதலமைச்சரை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.,

உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் ஆளும் கட்சியாக இருக்கின்ற சூழ்நிலை இப்பொழுது தான் வந்துள்ளது அதை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் வீடியோ மாடல் ஆட்சியாக இருக்காது நாங்கள் ரியலாக இறங்கி நாங்களே இறங்கி வேலை பார்ப்போம். ஒரு பகுதியில் இருக்கு மக்களாக இறங்கி நான் செயல்படுவேன் தவிர எம்எல்ஏவாக செயல்படுவதற்கு ஒன்றும் இல்லை முதலமைச்சர் என்ன சொன்னாலும் மக்கள் எந்த கோரிக்கை மனு கொடுத்தாலும் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக தான் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அந்தப் பணியை சிறப்பாக செய்வேன் எனப் பேட்டியளித்தார்.,