• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

ByN.Ravi

Jun 4, 2024

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் தி;.மு.க.சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா வாடிப்பட்டி பஸ்நிலையம் பேரூர்கட்சி அலுவலக வளாகத்தில், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு, பேரூர்
செயலாளர் மு.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் பால
ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.,ராதாகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகர், முன்னாள்மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான், சி;.பி.ஆர்.சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் கார்த்திக், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் வரவேற்றார். இந்தவிழாவில், வெங்கடேசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி ஏழை, எளியோருக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில், அவைத்தலைவர் திரவியம், கஜேந்திரன், குப்புசாமி, பேரூர் தகவல் தொழிலநுட்பஅணி அரவிந்தன், வார்டு செயலாளர்கள் ராம்மோகன், பன்னீர், கண்ணன், எம்.எஸ்.முரளி, ராஜசேகரன், மருதுபாண்டி, வினோத், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பேரூர் துணைச்
செயலாளர் கவுன்சிலர் ஜெயகாந்தன் நன்றி கூறினார். கச்சைகட்டியில், மாவட்ட முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் அயூப்கான் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டது. இதில், கிளைசெயலாளர் அயோத்திராமன்,அய்யாவு, பதினெட்டு,
சித்திக், கந்தவேல், கலந்து கொண்டனர். முடிவில், ராங்கநாதன் நன்றி கூறினார். வாடிப்பட்டி நீதிமன்றத்தில் தி.மு.க.வழக்கறிஞர்பிரிவு சார்பாக, அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி தலைமை தாங்கி இனிப்பு வழங்கினார். வழக்கறிஞர்கள் ராஜாஜி, கோகுல்நாத், சந்திரமோகன், பழனிக்குமார், சக்திவேல் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.