• Fri. Dec 13th, 2024

உசிலம்பட்டியில் காமாட்சியம்மனுக்கு பாலபிஷேகம்

ByP.Thangapandi

Jun 4, 2024

உசிலம்பட்டியில் காமாட்சியம்மனுக்கு பால்குடங்களுடன் ஊர்வலமாக சென்று பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தேனி மெயின் ரோட்டில் பட்டறைத் தெருவில் அமைந்துள்ளது காமாட்சியம்மன் கோவில். வைகாசி திருவிழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

இதில் முதல் நாளான இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களுடன் உசிலம்பட்டி முருகன் கோவிலிருந்து புறப்பட்டு தேனி நெடுஞ்சாலை வழியாக சென்று பட்டறை தெருவில் உள்ள காமாட்சியம்மன் கோவில் சென்று பால் அபிஷேகம் செய்தனர்.

பின்னர் காமாட்சியம்மனுக்கு சந்தனம், தயிர், இளநீர் , பன்னீர், பழங்கள் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் செய்து பின்னர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.