• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கார்த்திக் சிதம்பரம் பரப்புரை..,

ByP.Thangapandi

Apr 20, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார்-க்கு ஆதரவாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.கே.மூக்கையாதேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு பரப்புரை மேற்கொண்டார்.,

பிரச்சாரத்தை முடித்துவிட்டு, டீ மற்றும் உணவு அருந்திய கார்த்திக் சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.,

இன்று கன்னியாகுமரி க்கு ராகுல் காந்தி வருகிறார், தேர்தல் நன்றாக இருக்கிறது., கூட்டணியும் நல்ல கூட்டணி முதல்வரின் ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.,

பாஜக மறைமுகமாக தமிழ்நாட்டிற்குள் வர கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்., புதிதாக வரும் அரசியல் கட்சிகள் சின்ன தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சீட்டாக மாறி வெற்றியாக அமையாது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும், அதனால் அதற்கு ஓட்டளித்து ஓட்டை வீணாக்க கூடாது என்பதும் தெரியும்.,

எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை என்று சொல்லலாம் ஆனால் அவரது நடத்தையை பார்க்கும் போது, அவர்களது கட்சியில் உள்ள சின்ன பஞ்சாயத்தை தீர்க்க வேண்டுமென்றாலும் டெல்லிக்கு தானே போகிறார்கள்., அவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை.,

பாஜக கொண்டு வரும் நிறைய சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம், ஆனால் அதிமுக எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை., ஒவ்வொரு தருனத்திலும் பாஜக எடுக்கும் முடிவிற்கு அதிமுக எந்த எதிர்ப்பும் சொல்வது கிடையாது.,

முன்னாடி இருந்த அதிமுக இப்போது இல்லை., அதிமுக பெரிய கட்சி அதை ஏற்றுக் கொள்கிறேன் முன்னாடி இருந்த ஆளுமை இப்போது அதிமுகவில் இல்லை.,

விஜய் எதுமே பேசுவதில்லை, எழுதி கொடுப்பதை மட்டுமே படிக்கிறார், அவராக சுயமாக சிந்தித்து அவரது சிந்தனையின் கீழ் தலைமை தாங்குவதாக தெரியவில்லை.,

ஒரு ஸ்டார் நடிகர் என்பது மட்டும் ஒரு அரசியலுக்கு போதும் என்பது எனக்கு தெரியவில்லை.,

அவரது தனிப்பட்ட குடும்ப விஷயத்தை பற்றி பேச விரும்பவில்லை அரசியல் வேறு குடும்பம் வேறு.,

சினிமாவை ஒரு பொழுதுபோக்காக பார்க்க வேண்டும்., பெண்கள் ரீல்ஸ் – யை பார்கிறார்கள்., ரீல்ஸ்-யை பாருங்க லைக் போடுங்க, ஓட்டு போடுவதாக இருந்தால் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு க்கு ஓட்டு போடுங்க என பேட்டியளித்தார்.,