• Wed. Apr 24th, 2024

மயிலாடுதுறை-காரைக்குடிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் சேவை!

By

Aug 30, 2021
Train

மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு சிறப்பு ரயில் சேவை, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி இடையிலான சிறப்பு ரயில் சேவை இன்று முதல் துவங்கியது. மயிலாடுதுறையில் ரயில்வே ஜங்ஷனில் இருந்து 6:45 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் 7.45 மணிக்கு திருவாரூர் செல்லும். அங்கிருந்து 8.15 மணிக்கு புறப்பட்டு மதியம் காரைக்குடி சென்றடையும். 2.15 க்கு புறப்பட்டு இரவு 8:10 மயிலாடுதுறை வந்தடையும். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு 30 ரூபாய் கட்டணமும் காரைக்குடிக்கு 75 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மயிலாடுதுறையில் இருந்து துவங்கிய ரயில் சேவையை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *