• Tue. May 7th, 2024

கன்னியாகுமரி_சேலம் மாநில உரிமைகளை மீட்க, இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பயணம்…

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் இருந்து, சென்னை வழியாக அடுத்த மாதம் (டிசம்பர்-17)ல் நடைபெறும் 2_வது இளைஞர் அணி சேலம் மாநாட்டின் விழிப்புணர்வு பிரச்சார இருசக்கர வாகனத்தை(பைக்கை) தமிழக அரசின் விளையாட்டு துறை அமைச்சரும், திமுகவின் இளைஞர் அணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் இருந்து தொடங்கி வைத்தார்.

மாநில உரிமைகளை மீட்க கழக தலைவர் அழைக்கின்றார் என்ற அழைப்பின் அடையாளமாக, தமிழகத்தில் இளைஞர் அணி இருசக்கர பேரணி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு வள்ளுவர்- குமரி, தந்தை பெரியார்-ஈரோடு, அண்ணா-காஞ்சிபுரம், கலைஞர்-திருவாரூர் என பிரிக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகள் வழியாக பயணப்பட்டு, எதிர் வரும் (டிசம்பர்17)ம் நாள் சேலம் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பைக் பயணத்தை தொடங்கி வைக்கும் முன், பயணக் குழுவினரிடம் பேசியது, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நீங்கள் அனைவரும் கவனமாக பயணித்து அடுத்த மாதம் 17_ம் தேதி சேலம் மாநாடு திடலுக்கு 13_நாட்களில், 188_இருசக்கர வாகனங்களில், 504பிரச்சார மையங்களில் பிரச்சாரம் செய்து, 234-சட்ட மன்ற தொகுதிகளை கடந்து வரும்போது உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க கழக தலைவரும், நானும் காத்திருப்போம்.

சேலத்தில் நடைபெற உள்ளது மாநில உரிமை மீட்பு மாநாடு. குறிப்பாக கல்வி உரிமையை நாம் மத்திய அரசிடம் இழத்து விட்டோம்.

நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி விட்டோம். எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வு ரத்தாகவில்லை. ஒன்றிய அரசை வலியுறுத்தி இதுவரை 50_லட்சம் கடிதங்கள் மூலம் தகவல்கள் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு இதுவரை அளித்துள்ள வரி 25,000_ம் கோடி.ஆனால் மத்திய அரசு திருப்பி அளித்த தொகை வெறும் 2000-ம் கோடி மட்டுமே இதை எல்லாம் இருசக்கர வாகனத்தில் செல்லுகிற நீங்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பிரச்சாரத்தையும் செய்யவேண்டும்.இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் உங்கள் ஒவ்வொருவரது பெயரும் எனக்கு தெரியும்.உங்களுகெல்லாம் ஒரு குட்டி கதை சொல்லுகிறேன். பூட்டப்பட்டிருந்த ஒரு பூட்டை கனமான சுத்தியலால் பல முறை ஓங்கி ஓங்கி அடித்தும் பூட்டை திறக்க முடியவில்லை. பூட்டை சாவிகொண்டு எளிதாக திறக்க முடிந்தது. கனமான சுத்தியலால் திறக்க முடியாத பூட்டை ஒரு சின்ன சாவியால் திறக்க முடிந்தது.

சாவியை பார்த்து சுத்தியல் கேட்டதாம்.?எப்படி இவ்வளவு சாதுரியமாக திறந்தாய்? சாவி சொன்னதாம்,ஆணவத்தால்,நான் வலிமை மிகுந்து இருந்தும், தலையில் அடித்தால் பூட்டு திறக்காது..பூண்டின் இதயத்தை சாவியால் தொட்டால் போதும் பூட்டு திறந்து விடும்.

அந்த பூட்டு தான் தமிழகம்.சாவிதான் திமுக, அந்த தலைக்கனம் பிடித்த சுத்தியலால் தான் ஒன்றிய அரசு.பாஜகவால் தமிழகத்தில் என்றுமே கால் பதிக்க முடியாது எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது பேச்சில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *