• Tue. May 7th, 2024

எந்த கட்சியினரும் கட்சிமாறி அதிமுகவிற்கு வரலாம்.., தளவாய் சுந்தரம் அழைப்பு…

நாகர்கோவிலில் நட்சத்திர விடுதியில் கடந்த (நவம்பர்_13)ம் நாள்.குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., விற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளின் பூத் வாரியாக பூத் கமிட்டியினை விரைவாக அமைத்து, அது தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகத்தை தலைமைக்கு சமர்ப்பித்தல் பற்றிய கலந்தாய்வு கூட்டம். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அ தி மு க உறுப்பினர் தளவாய் சுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில். தி மு க வில் 36_ஆண்டுகள் பயணித்த, திமுகவின் மீனவர் பிரிவின் தமிழக துணை செயலாளராக இருந்த நசரேயன் பசலியான் அண்மையில் அ தி மு க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி க்கு பூ கொத்து கொடுத்து அ தி மு க வில் புதிதாக ஞானாஸ்தானம் பெற்றவரும் அ தி மு க,தி மு க என பதவியை தக்க வைக்க, சர்க்கஸ் சகாப்தம் நிறைந்த அழகேசனையும் வரவேற்று பேசிய தளவாய் சுந்தரம். யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கும் மாறலாம். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி மு க., வில் 36 ஆண்டுகள் உழைத்த நசரேயன் பசலியான் தமிழக முதல்வர், மாவட்ட அமைச்சர், நாகர்கோவிலில் மேயர் என்ற பதவிகள் வகிப்பவர்கள் மத்தியில் இருந்து இன்று நமது இயக்கத்திற்கு வந்திருப்பவரையும், மீண்டும் நம் கட்சிக்கு வந்திருக்கும் அழகேசனையும் வரவேற்கிறேன் என வரவேற்பு கொடுத்தவர்.

தமிழகத்தில் எந்த கட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் இருந்த கட்சியில் எத்தனை ஆண்டுகள் பணி செய்திருந்தாலும், எந்த பதவியை வகித்தவர்களாக இருந்தாலும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கூட கட்சி மாறி அ தி மு க வுக்கு வரலாம். பதவி கிடைப்பது என்பது அவரவர் தலை எழுத்து அதிர்ஷ்டமும் என தெரிவித்தவர்.அடுத்து சொன்னது.நம் கட்சிக்கு வந்துள்ள நசரோயன் பசலியான் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றாலும் ஆச்சரியம் இல்லை என தெரிவித்தார். கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் என மும்முனை போட்டி உறுதி என்ற நிலையில்.நான்காவது கட்சியாக அ தி மு க வும் போட்டியிலா.!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *