கன்னியாகுமரி நகராட்சி முதல் கூட்டம் அதன் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கன்னியாகுமரியை நகராட்சியாக தரம் உயர்த்தியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குடிநீர், தெருவிளக்கு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்
என் ஆணையர் கன்னியப்பன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேருராட்சி காலத்தில் பணியாற்றி ய
முருகன் பணகுடிக்கு மாற்றலாகி செல்லும் நிலையில் அவரது பணிக்காலத்தை நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட அனைத்து உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தார்கள்.
