• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திமுகவுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

By

Aug 26, 2021 , ,
Kanniyakumari

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றிய திமுக செயலாளர் ஜான் பிரைட் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் கைது செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் நடத்தினர். அதன்பின் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஒருவாரத்தில் கைது செய்து விடுவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவிட்டனர்.இதுகுறித்து பேட்டியளித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் “ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்” எனவும் எச்சரித்துள்ளார்.