• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கன்னட சூப்பர்ஸ்டார் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்…

கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் இன்று காலை உடற்பயிற்சி செய்யும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, பெங்கலூரில் உள்ள தனியார் விக்ரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

புனித் ராஜ்குமாரை பார்க்க அவரின் குடும்பத்தினர் மற்றும் அரசியல், திரையுலக பிரபலங்கள் விக்ரம் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர் என்ற விஷயம் அறிந்ததும் மருத்துவமனையை சுற்றி ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.

இவர் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனாவார். இவர் அண்ணன் சிவ ராஜ்குமாரும் முன்னணி நடிகராவார். 46 வயதாகும் இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

பஜரங்கி-2 படத்தின் முன் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட புனித் ராஜ்குமார் இந்த படத்தை இன்று பிரத்யேகமாக பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தியுள்ளார்.

இவர் 1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக இருந்த பொழுது தேசிய விருதை வென்றவர். 4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் வென்றவர். கடைசியாக யுவரத்னா திரைப்படத்தில் வெள்ளித்திரையில் காணப்பட்ட புனித், தற்போது ஜேம்ஸ் என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இவருடைய மரணம் கன்னட திரைத்துறை மட்டுமல்லாது இந்திய திரைத்துறையையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. பல நடிகர் நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.