• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கந்தசஷ்டி விழா நிறைவு!

Byகாயத்ரி

Nov 11, 2021

திருத்தணி, திருப்போரூர் முருகன் கோயிலில்களில் நேற்று திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் மாலை புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இதற்காக காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகருக்கு சுமார் ஒரு டன் எடையுள்ள பல வகையான மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

கந்தசஷ்டி விழாவின் நிறைவாக நேற்று காவடி மண்டபத்தில் கல்யாண உற்சவர் முருகன், தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருக்கல்யாண நிகழ்வின் போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பின்னர், திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பலர் இந்நிகழ்ச்சியை யூடியூப் சேனல் மூலம் கண்டு மகிழ்ந்தனர்.