காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடியை தொடர்ந்து பிரமோற்சவ விழாவில் நடைபெற்ற ஊழல் புகார்கள் ஆர்.டி.ஐ மூலம் அம்பலம்.
காஞ்சிபுரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோவில் நகரம் தான். இந்த கோவில் நகரத்தில் சுமார் மூன்றாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அடுத்தடுத்து ஊழல் புகார்கள் ஆதாரத்துடன் வெளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அதிமுக ஆட்சியில் ஏகாம்பரநாதர் கோவிலில் நடைபெற்ற பல ஊழல் புகார்களை ஆதரத்துடன் வெளி கொண்டு வந்துள்ளளார் .ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பிரமோற்சவம் விழா பத்து நாட்களுக்கு மேலாக நடைபெறுவது வழக்கம். 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 39 லட்சம் ரூபாய் பிரமோற்சவம் திருவிழாவுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது காஞ்சிபுரம் பகுதி மக்களிடையே பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பிரமோற்சவம் திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கக்கு சாப்பாட்டிற்க்கு 4 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், மேலும் அரிசி, எண்ணெய், மளிகை பொருட்கள் என மொத்த 7 லட்சம் சாப்பாட்டிற்க்கு மட்டுமே செலவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வருகை தந்த வி.ஐ.பிக்கு மாலை மற்றும் தேங்காய் பழம் வாங்க 12 ஆயிரம் ரூபாய் எனவும், என கணக்கு காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்ச பூத ஸ்தலத்தில் முக்கிய ஸ்தலமாக உள்ள நிலம் தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 20 லட்சம் செலவானதை 40 லட்சம் செலவானதாக கணக்கு காட்டி பெரும் தொகையை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஊழல் செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பட்ட நகலில் கொடுக்கப்பட்டுள்ள வரவு செலவு கணக்குகள் எதுவும் உன்மை இல்லை என டில்லிபாபு தெரிவித்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை 100 கிலோ தங்கத்தில் செய்யப்பட்டது. ஆனால் துளியும் தங்கம் இல்லை மிக பெரிய மோசடி நடைபெற்றது. இந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு முடிவதற்க்குள் மற்றொரு ஊழல் மோசடி சம்பவம் நடைபெற்றுள்ளது காஞ்சிபுரம் கோவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதம் போராட்டத்திற்க்கு பிறகே இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கப்பட்டுள்ளதாக டில்லிபாபு தெரிவித்துள்ளார். தமிழக அரசு கோவில் செயல் அலுவலர் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் விசாரணை செய்து ஊழல் செய்த அதிகாரியை பணியிட நீக்கம் செய்து கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.