• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

“காமராஜர் பிறந்த நாள் விழா”..,

ByKalamegam Viswanathan

Jul 15, 2025

“காமராஜர் பிறந்த நாள் விழா” மதுரை மாவட்டம் தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் காமராஜர் பிறந்தநாள் விழா மிக மிக கோலகலமாக கொண்டாடப்பட்டது. சமூக சேவகியும், நடிகையுமான வனிதா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

விழாவில் நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, சமூக சேவகி கலா ராணி, நடிகை புனிதா மன்மதன், குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு 105 நபர்களுக்கு உணவு, லட்டு, வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.